சுடச்சுட

    


    கள்ளக்குறிச்சி அருகே உடலில் மண்ணெண்ணெயை ஊற்றித் தீவைத்துக் கொண்ட இளைஞர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
     தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் வெங்கடேசன் (29). இவரும் கள்ளக்குறிச்சி, கரியப்பா நகரைச் சேர்ந்த அண்ணாமலை மகள் நித்யாவும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 வயதில் மகன் உள்ளார்.
     இந்நிலையில், தம்பதியிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக கணவருடன் கோபித்து கொண்டு நித்யா அவரது தாய் வீட்டுக்குச் சென்று விட்டாராம். பலமுறை கணவர் சென்று அழைத்தும் வரவில்லையாம்.
     இதனால் மனமுடைந்த வெங்கடேசன் கடந்த 16 ஆம் தேதி வீட்டிலிருந்த
     மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றிக்கொண்டு தீவைத்துக் கொண்டாராம். அவரது அலறல் சப்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வழியிலேயே அவர் இறந்தார்.
     இது குறித்த புகாரின்பேரில் சின்னசேலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai