Enable Javscript for better performance
உள்ளாட்சித் தேர்தல்: திமுகவினர் விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    உள்ளாட்சித் தேர்தல்: திமுகவினர் விண்ணப்பிக்கலாம்

    By செஞ்சி,  |   Published on : 19th September 2016 09:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினர், மாவட்டச் செயலர் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பெற்று விண்ணப்பிக்கலாம் என விழுப்புரம் வடக்கு மாவட்ட மாவட்டச் செயலர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ., வேண்டுகோள் விடுத்துள்ளார்.
     அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினரிடமிருந்து உரிய விண்ணப்ப படிவங்கள் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை தொகுதி வாரியாக கீழ்க்கண்ட இடங்களில் வரவேற்கப்படுகிறது.
     மைலம் தொகுதியைச் சேர்ந்தவர்கள் திங்கள்கிழமை (செப். 19) தீவனூரில் உள்ள கே.டி.எஸ்.திருமண மண்டபத்திலும், திண்டிவனம் தொகுதியைச் சேர்ந்தவர்கள் செவ்வாய்க்கிழமை (செப். 20) மைலம் முருகன் திருமண மண்டபத்திலும், செஞ்சி தொகுதியைச் சேர்ந்தவர்கள் புதன்கிழமை (செப். 21) வள்ளி அண்ணாமலை திருமண மண்டபத்திலும் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.
     நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிப்போர் ரூ. 4,000, பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ. 1,000, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிக்கு ரூ. 10,000, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு ரூ. 2,000, ஆதிதிராவிடர் மற்றும் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள வார்டுகளில் போட்டியிடுவோர் மேற்குறிப்பிடப்பட்டுள்ள கட்டணத்தில் பாதித் தொகை மட்டுமே செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
     விண்ணப்பப் படிவங்களை செஞ்சியில் உள்ள மாவட்டச் செயலர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai