சுடச்சுட

    

    நாட்டிலேயே தமிழகத்தில்தான் விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது: அமைச்சர் சி.வி.சண்முகம்

    By விழுப்புரம்,  |   Published on : 19th September 2016 09:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் குடும்ப அட்டைக்கு 20 கிலோ விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது என விழுப்புரத்தில் நடைபெற்ற நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சிறைத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
     விழுப்புரத்தில் வருவாய்த் துறையின் மூலம் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
     இதில் கலந்துகொண்டு சிறைத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:
     தமிழகத்தில் மொத்தம் 1 கோடியே 91 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் மாதம்தோறும் 20 கிலோ விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்று 20 கிலோ அரிசி வழங்கப்படுவதில்லை. இதற்காக தமிழக அரசு ஆண்டுக்கு ரூ. 5,400 கோடி செலவழித்து வருகிறது என்றார். தொடர்ந்து அவர், பல்வேறு திட்டத்தின் கீழ் மொத்தம் 857 பயனாளிகளுக்கு ரூ. 1.27 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளையும், 1,029 பேருக்கு குடும்ப அட்டைகளையும் வழங்கினார். ஏழுமலை எம்.பி., மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், திண்டிவனம் நகர்மன்றத் தலைவர் வெங்கடேசன், விழுப்புரம் கோட்டாட்சியர் ஜீனத்பானு, வட்டாட்சியர் வெற்றிவேல் உள்ளிட்ட அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும்
     ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai