சுடச்சுட

  

  பாதுகாப்பு வசதிகள் இல்லாத செஞ்சி அரசு மருத்துவமனை

  By செஞ்சி,  |   Published on : 19th September 2016 09:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  செஞ்சி அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் பிரசவ வார்டில் உள்ள பெண்கள் மற்றும் நோயாளிகள் அச்சமடைந்துள்ளனர்.
   செஞ்சி அரசு மருத்துவமனையில் நாள்தோறும் சுமார் 1,000 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இங்கு பிரசவம் பார்த்தல், குடும்பக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன.
   இங்குள்ள பிரசவ வார்டில் நாள்தோறும் சுமார் 15 பெண்களுக்கு பிரசவம் பார்க்கப்படுகிறது. அவ்வாறு பிரசவத்துக்கு வரும் பெண்களும், குழந்தைகளும் இங்கு தங்க வேண்டியுள்ளது. சிலருக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சையும் செய்யப்படுகிறது.
   இந்நிலையில் இந்த வார்டில் செவிலியர்கள் யாரும் இரவில் தங்குவதில்லையாம். இதனால் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலையும், அவசர உதவிக்கு செவிலியரோ, மருத்துவரோ இல்லாமல் அவதிக்குள்ளாவதாகவும் தெரிவிக்கின்றனர்.
   மேலும், இரவில் சமூக விரோதிகள் சிலர் உள்ளே புகுந்து பெண்களை மிரட்டிய சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. இதனால் பிரசவ வார்டில் உள்ள பெண்களும், உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களும் அச்சமடைந்துள்ளனர்.
   எனவே, இரவு நேரத்தில் செவிலியர்கள், மருத்துவர்கள் தங்கியிருந்து சேவை செய்யவும், பிரசவ வார்டு உள்ளிட்ட இடங்களில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு அச்சமில்லாத நிலையை ஏற்படுத்த வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai