சுடச்சுட

  

  திண்டிவனத்தை அடுத்த தென்களவாய் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் மரம் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
   பள்ளித் தலைமை ஆசிரியர் நா.ரமேஷ் தலைமை வகித்து, மரக்கன்றுகளை நட்டார். தொடர்ந்து அவர், மரங்களைப் பராமரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து மாணவர்களிடையே எடுத்துரைத்தார். ஆசிரியர்கள் வேல்முருகன், விஜயலட்சுமி, குணசேகரன், மோகன், ராஜாராம் ஆகியோர் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர்.
   இதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள் அனைவரும், இனி வரும் காலங்களில் அதிகமாக மரக்கன்றுகளை நட்டுப் பராமரிப்போம் என உறுதிமொழி ஏற்றனர்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai