சுடச்சுட

    

    மழைக்கால மின் விபத்துகளை தவிர்க்கும் பணிகள் தொடக்கம்

    By விழுப்புரம்,  |   Published on : 19th September 2016 09:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மழைக்கால மின் விபத்துகளைத் தவிர்க்கும் பணிகளை முடக்கிவிட்டிருப்பதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
     இது குறித்து, விழுப்புரம் மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் இரா.சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வடகிழக்கு பருவமழை காரணமாக மின்தடை, மின் விபத்துகள் ஏற்படாமல் எச்சரிக்கையுடன் இருக்கவும், உடனடியாக செயல்பட்டு மின்சார பிரச்னைகளைத் தீர்க்கவும் உரிய தளவாடப் பொருள்களுடன், மின்வாரிய குழுவினர் தயார் படுத்தப்பட்டுள்ளனர்.
     பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏற்படும் மின்தடை, மின்சாதன சேதம் குறித்த புகார்களை உடனே தெரிவிக்க அறிவுறுத்தப்படுகிறது.
     மின்சார விபத்து எச்சரிக்கை: அறுந்த நிலையில் தரையில் விழுந்து கிடக்கும் மின் கம்பிகள், தாழ்வான மின் கம்பிகளை பொதுமக்கள் தொடக்கூடாது. மின்சார குறைபாடுகளைத் தாங்களே சரி செய்யாமல், மின் ஊழியர்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
     மின்னல் தாக்குதலின்போது டிவி, மிக்ஸி, கிரைண்டர், கணினி, தொலைபேசி போன்றவற்றை உபயோகப்படுத்த வேண்டாம். முன்னெச்சரிக்கையுடன் இருந்து விபத்தினைத் தவிர்க்க வேண்டும்.
     அவசரத் தேவைக்கான சேவை எண்கள்: மின் விபத்து தொடர்பாக 94458 55719 என்ற எண்ணை தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும், விழுப்புரம் - 94458 55738, திண்டிவனம் - 94458 55835, செஞ்சி - 94458 55784, கண்டமங்கலம் - 94458 55769 என்ற எண்ணிலும், அப்பகுதி அதிகாரிகளைத் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம் என அந்த செய்திக் குறிப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai