சுடச்சுட

    

    மாவட்டத்தில் 560 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு: சீதனப் பொருள்களை வழங்கினார் அமைச்சர்

    By விழுப்புரம்,  |   Published on : 19th September 2016 09:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் விழுப்புரத்தில் 560 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
     மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற விழாவில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு, சீதனப் பொருள்களை வழங்கி, வளைகாப்பு விழாவைத் தொடங்கி வைத்தார்.
     கருவுற்ற ஏழை, எளிய கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது.
     அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 2,938 அங்கன்வாடி மையங்களில் பயனடைந்து வரும் கர்ப்பிணிகள் 8,160 பேருக்கு மங்கலப் பொருள்கள், ஐந்து வகை உணவு மற்றும் ஆலோசனைப் புத்தகம் ஆகியவை வழங்கிட ரூ. 20.40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
     மாவட்டத்தில் முதல் கட்டமாக விழுப்புரம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட கோலியனூர் மற்றும் விழுப்புரம் நகராட்சிப் பகுதிகளில் செயல்படும் 169 அங்கன்வாடி மையங்களில் பயனடைந்து வரும் 560 கர்ப்பிணிகளுக்கு மொத்தம் ரூ. 1,40,000 செலவில் சமுதாய வளைகாப்பு நடைபெற்றது. விழாவில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்று, கர்ப்பிணிப் பெண்களுக்கு மங்கலப் பொருள்கள், வளையல்கள், வெற்றிலைப் பாக்கு, கண்ணாடி மற்றும் பரிசு பொருள்கள் உள்ளிட்ட 11 வகையான பொருள்கள் கொண்ட சீதனத்தையும் 5 வகை சாதங்களையும் வழங்கினார். ராஜேந்திரன் எம்.பி., சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் ஜோதி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் அன்பழகி, ஒன்றியக் குழுத் தலைவர் விஜயா சுரேஷ்பாபு மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai