Enable Javscript for better performance
ரத்ததான முகாம்- Dinamani

சுடச்சுட

    

    திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டையில் ரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
     மணலூர்பேட்டை தமிழ்ச் சங்கம், அப்துல் கலாம் நற்பணி மன்றம், தென்பெண்ணை அரிமா சங்கம், புதுவை ஜிப்மர் மருத்துவமனை ஆகியவை இணைந்து முகாமை நடத்தின.
     முகாமுக்கு, தமிழ்ச் சங்கத் தலைவர் தா.சம்பத் தலைமை வகித்தார். அப்துல் கலாம் நற்பணி மன்றத் தலைவர் சா.மணிகண்டன், வேளாண் அலுவலர் தா.சிவநேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மணலூர்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் சு.அகிலன் முகாமைத் தொடங்கி வைத்தார்.
     முகாமில் புதுவை ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் பாசுதேவ், கண்ணகி, வடிவேலு ஆகியோர் தலைமையிலான குழுவினர், கொடையாளர்களிடம் இருந்து 30 யூனிட் ரத்தம் தானமாகப் பெற்றனர்.
     காவல் உதவி ஆய்வாளர் சு.அகிலன், காவலர் ஜெ.கோதண்டராமன், கல்லூரி மாணவி வாசுகி உள்பட 30 பேர் ரத்ததானம்
     செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai