Enable Javscript for better performance
அரசுப் பேருந்து மீது கல் வீச்சு- Dinamani

சுடச்சுட

    


    திண்டிவனம் புறவழிச் சாலையில் சென்ற அரசுப் பேருந்தின் மீது கல் வீசித் தாக்கிய மர்ம நபர்களை திண்டிவனம் போலீஸார் தேடி வருகின்றனர்.
     வேலூரில் இருந்து புதுச்சேரிக்கு அரசுப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை திண்டிவனம் புறவழிச் சாலையில் சென்றது. அப்போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 3 பேர் பைக் ஒன்றில் பேருந்தைக் கடந்து சென்று, முன்பக்க கண்ணாடி மீது கல் வீசிவிட்டு, தப்பிச் சென்றனர். இதில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது.
     இது குறித்து பேருந்தின் ஓட்டுநர், சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பாலாஜி திண்டிவனம் போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai