சுடச்சுட

    

    உளுந்தூர்பேட்டை அருகே விபத்து பகுதிகளில் மத்திய அமைச்சர் ஆய்வு

    By உளுந்தூர்பேட்டை  |   Published on : 20th September 2016 09:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உளுந்தூர்பேட்டையில் தொடர் விபத்துகள் ஏற்படும் பகுதிகளை மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.
     சென்னையிலிருந்து திருச்சி சென்ற மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் உளுந்தூர்பேட்டையில் மாநிலப் பொதுச் செயலர் கருப்பு முருகானந்தம் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
     இதனைத் தொடர்ந்து அவர், உளுந்தூர்பேட்டை பகுதியில் தொடர் விபத்துகள் ஏற்படும் செங்குறிச்சி, சுங்கச்சாவடி அருகே உளுந்தூர்பேட்டை பிரிவுச் சாலை மற்றும் எடைக்கல் அஜிஸ்நகர் புறவழிச் சாலை, சேலம் பிரிவுச் சாலை உள்ளிட்ட பகுதிகளைப் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தொடர் விபத்து ஏற்படும் செங்குறிச்சி மற்றும் அஜிஸ்நகர் ஆகிய இடங்களில் இருபுறங்களிலும் அணுகுச்சாலை விரைவில் அமைக்கப்படும். விபத்துகளைத் தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
     மாநிலச் சட்டப்பிரிவு துணைத் தலைவர் எஸ்.பக்கிரிசாமி, மாவட்டத் தலைவர் சி.எஸ்.ராம்நாத், மாநிலச் செயற்குழு உறுப்பினர் வி.அருள், மாவட்டப் பொதுச் செயலர் வி.கண்ணன், வழக்குரைஞர் பிரிவு கோட்டப் பொறுப்பாளர் எல்.கண்ணன், மாவட்டச் செயலர் கே.கஜேந்திரன், பிரசார அணிச் செயலர் க.குருமூர்த்தி, ஒன்றியத் தலைவர்கள் நவீன்குமார், சக்திவேல், இளைஞரணி நிர்வாகி சீனிவாசன் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai