சுடச்சுட

    

    திருக்கோவிலூர் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தம்பதி திங்கள்கிழமை காயமடைந்தனர்.

     சந்தப்பேட்டையைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கஜேந்திரன் (62). இவரது மனைவி ராஜேஸ்வரி (60). இருவரும் திருவண்ணாமலையில் இருந்து திருக்கோவிலூருக்கு காரில் வந்துகொண்டிருந்தனர். கனகனந்தல் கூட்டுச்சாலை அருகே வந்தபோது, சாலையின் குறுக்கே வந்த மாட்டின் மீது கார் மோதி, விபத்துக்குள்ளானது.
     இதில் தம்பதி இருவரும் காயமடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு, அருகிலுள்ள சந்தப்பேட்டை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர், ராஜேஸ்வரி தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து திருக்கோவிலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai