சுடச்சுட

    

    காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

    By விழுப்புரம்,  |   Published on : 20th September 2016 08:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிர்நீத்த இந்திய ராணுவ வீரர்களுக்கு விழுப்புரத்தில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
     காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ராணுவ அலுவலகம் மீது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீவிரவாதிகள் சிலர் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தற்கொலைப் படை தாக்குதலில், 20 ராணுவ வீரர்கள் வரை உயிரிழந்தனர். 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள் பலர் காயமடைந்தனர்.
     தாக்குதலில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு, நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. விழுப்புரம் காந்தி சிலை அருகே ராணுவ வீரர்களுக்கு திங்கள்கிழமை இரவு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில், மோட்ச தீபம் ஏற்றி வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
     மாவட்டத் தலைவர் சந்திரசேகர், இந்து தர்மசேவா சமீதி செயலர் ஆசைத்தம்பி உள்ளிட்டோர் தலைமையில், பலர் கலந்துகொண்டு, உயிர்நீத்த பாதுகாப்புப் படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai