சுடச்சுட

    

    கள்ளக்குறிச்சி அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளித்தபோது வலிப்பு ஏற்பட்டு 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
     பிரிதிவிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார் மகன் அறிவுமதி (14). இவர், தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயின்று வந்தார்.
     இந்நிலையில், திங்கள்கிழமை காலை அதே பகுதியில் உள்ள கிணற்றில் அவரது நண்பர்களுடன் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்து விட்டாராம்.
     தகவலறிந்து வந்த தியாகதுருகம் போலீஸார் மாணவரின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai