Enable Javscript for better performance
குடிநீர் பிரச்னை: சாலை மறியலுக்கு பெண்கள் முயற்சி- Dinamani

சுடச்சுட

    

    குடிநீர் பிரச்னை: சாலை மறியலுக்கு பெண்கள் முயற்சி

    By விழுப்புரம்,  |   Published on : 20th September 2016 09:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம் அருகே வழுதரெட்டி பகுதியில் குடிநீர் பிரச்னையைத் தீர்க்கக் கோரி, அப்பகுதி பெண்கள் திங்கள்கிழமை சாலை மறியல் செய்ய முயன்றனர்.
     தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸார் விரைந்து வந்து, அவர்களைத் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.
     அப்போது பொதுமக்கள் கூறியது: வழுதரெட்டி பகுதியில் கடந்த 5 மாதங்களாக குடிநீர் பிரச்னை உள்ளது. இங்குள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், பலர் தங்கள் வீடுகளில் மோட்டார் வைத்து தண்ணீரை எடுப்பது, குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகளுக்கு நீர் ஏற்றும் மோட்டார் பழுதடைந்தது உள்ளிட்ட காரணங்களால் குடியிருப்புகளில் உள்ள குழாய்களில் தண்ணீர் வராமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
     இது குறித்து, வார்டு உறுப்பினர், தலைவர் உள்ளிட்டோரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், தண்ணீர் தேவைக்கு அவதிப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்றனர்.
     இது குறித்து, நகராட்சி அலுவலகத்துக்குச் சென்று முறையிடுமாறும், இவ்வாறு சாலை மறியலில் ஈடுபடக் கூடாது என்றும் போலீஸார் தெரிவித்ததையடுத்து, அப்பகுதி மக்கள், நகராட்சி அலுவலகத்துக்குச் சென்று, மனு அளித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai