சுடச்சுட

    

    டெங்கு காய்ச்சல் குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம்: சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

    By  விழுப்புரம்,  |   Published on : 20th September 2016 02:38 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதால், டெங்குக் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பீதியடைய வேண்டாமென சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.

     சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் டெங்கு மற்றும் இதர தொற்று நோய்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

     சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன், எம்.பி.க்கள் இரா.லட்சுமணன், ராஜேந்திரன், வெ.ஏழுமலை, எம்.எல்.ஏ.க்கள் குமரகுரு, பிரபு, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை இயக்குநர் குழந்தைசாமி, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை இயக்குநர் செங்குட்டுவன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் வசந்தாமணி, இணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) ஜோதி, துணை இயக்குநர்கள் சவுண்டம்மாள், ஜெமினி, முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ், மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் வரலட்சுமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் அன்பழகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது: எல்லா காய்ச்சலும் டெங்கு காய்ச்சல் கிடையாது. "டெங்கு காய்ச்சல்' ஒரு வகை வைரஸ் காய்ச்சலாகும். இது நல்ல தண்ணீரில் உற்பத்தியாகும் "ஏடிஸ்' என்ற கொசு கடிப்பதால் பரவுகிறது. இக்கொசுக்கள் பகல் நேரத்தில் கடிக்கும் வகையைச் சேர்ந்ததாகும்.

     எனவே, பொதுமக்கள் பூந்தொட்டிகள், பயன்படாத டயர்கள், தேங்காய்ச் சிரட்டைகள், ஆட்டு உரல் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காமல் அப்புறப்படுத்த வேண்டும்.

     தமிழகத்தில் "எலிசா' முறையில் டெங்கு காய்ச்சலை கண்டுபிடிக்கும் மையங்கள் 75-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தால் கண்டறியப்பட்ட 29 வகையான வைரஸ் காய்ச்சல்களையும் கண்டறியும் வசதிகள் தமிழகத்தில் உள்ளன.

     மேலும், அரசு மருத்துவமனைகளில் தேவையான பரிசோதனைக் கருவிகள், மருந்து, மாத்திரைகள், ரத்தம், ரத்த தட்டணுக்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.
     இயற்கை முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, காய்ச்சலை குணப்படுத்தும் நிலவேம்புக் குடிநீர் இலவசமாக வழங்கப்படுகிறது.
     டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த அரசு போர்க்கால முறையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றார்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai