சுடச்சுட

    

    விழுப்புரத்தில் பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
     விழுப்புரம், அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மனைவி இந்து (20). இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
     இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்து தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு, தீவைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த அவரை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
     இது குறித்து இந்துவின் தந்தை விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் கோட்டாட்சியரும் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai