சுடச்சுட

    

    மாவட்டத்தில் 26.11 லட்சம் வாக்காளர்கள்: இறுதிப் பட்டியலை வெளியிட்டார் ஆட்சியர்

    By விழுப்புரம்,  |   Published on : 20th September 2016 08:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அதன்படி மாவட்டத்தில் 26.11 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
     ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் வாக்காளர் பட்டிலை வெளியிட, அதனைப் ஊரக வளர்ச்சி முகமை இயக்குநர் மணி பெற்றுக் கொண்டார்.
     ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (தேர்தல்) வி.சேகர், (வளர்ச்சி) ப.துரை ஆகியோர் உடனிருந்தனர்.
     ஊராட்சிகள்: மாவட்டத்தில் உள்ள 22 ஊராட்சி ஒன்றியங்களில் 1,099 ஊராட்சிகள் உள்ளன. இதில் 8,247 வார்டுகள் உள்ளன. இங்குள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 21,79,124 ஆகும்.
     இதில், ஆண் வாக்காளர்கள் 10,94,286. பெண் வாக்காளர்கள் 10,84,615. திருநங்கைகள் 223 பேர் உள்ளனர்.
     நகராட்சிகள்: மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகளில் 96 வார்டுகள் உள்ளன. அவற்றில் மொத்த வாக்காளர்கள் 2,18,385 பேர். ஆண்கள் 1,06,431 பேர். பெண் வாக்காளர்கள் 1,11,922 பேர். திருநங்கைகள் 32 பேர் உள்ளனர்.
     பேரூராட்சிகள்: மாவட்டத்தில் 15 பேரூராட்சிகளில் 243 வார்டுகள் உள்ளன. அதில், மொத்த வாக்காளர்கள் 2,14,475 பேர். ஆண்கள் 1,05,512 பேர் உள்ளனர். பெண் வாக்காளர்கள் 1,08,923 பேர் உள்ளனர். திருநங்கைகள் 40 பேர் உள்ளனர்.
     மாவட்டத்தில் ஒட்டு மொத்தமாக 26,11,984 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண்கள் 13,06,229 பேர். பெண்கள் 13,05,460 பேர். திருநங்கைகள் 295 பேர் உள்ளனர்.
     தொடர்ந்து, வாக்காளர் சேர்க்கைக்கு வாக்குச் சாவடி அலுவலர்களிடம் விண்ணப்பிக்கலாம் என்றும், வரும் ஞாயிற்றுக்கிழமை (செப். 25) இதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாகவும் ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai