சுடச்சுட

    

    திண்டிவனம் அருகே தூங்கிக் கொண்டிருந்த லாரி ஓட்டுநர் மீது மிளகாய் பொடிûயைத் தூவி மர்ம நபர்கள் பணம் மற்றும் ஏடிஎம் கார்டை ஞாயிற்றுக்கிழமை பறித்துச் சென்றனர்.
     திருச்சி, செம்பட்டியை சேர்ந்தவர் சம்பத். இவர், தனது லாரியில் சுங்குவார்சத்திரம் பகுதியில் இருந்து திருச்சிக்கு சென்றார். திண்டிவனத்தை அடுத்த மேல்பாக்கம் பகுதியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரத்தில் லாரியை நிறுத்திவிட்டு, சம்பத் தூங்கியுள்ளார். அப்போது அங்கே வந்த மர்ம நபர்கள் 3 பேர் அவர் மீது மிளகாய் பொடியைத் தூவிவிட்டு, அவரிடம் இருந்த ரூ. 5,000 பணம், செல்லிடப்பேசி, ஏடிஎம் கார்டு ஆகியவற்றைப் பறித்துச் சென்றனர். இது குறித்து சம்பத், ஒலக்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai