சுடச்சுட

    

    விழுப்புரம் நகர திமுக செயலர் கொலை வழக்கில் 13 பேர் கைது

    By விழுப்புரம்,  |   Published on : 20th September 2016 09:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம் நகர திமுக செயலர் கொலை வழக்கில் தொடர்புடைய 13 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து வாகனங்கள், ஆயுதங்கள், நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
     விழுப்புரம் நகர திமுக செயலர் செல்வராஜ் (45) கடந்த 14ஆம் தேதி நடைப்பயிற்சிக்குச் சென்ற போது, மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
     இதில் தொடர்புடைய விழுப்புரம் கல்லூரி சாலையைச் சேர்ந்த அப்பு என்கிற கலையரசன் (25), அசார் என்கிற இமாம்ஒலி (27), கீழ்ப்பெரும்பாக்கத்தைச் சேர்ந்த தேவேந்திர பாண்டியன் (28), பாணாம்பட்டு பாதையைச் சேர்ந்த ஏசு (24), சண்முகபுரம் காலனியை சேர்ந்த இம்ரான் (26), காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தியாகு (32), வெற்றிவேல் (28), திருச்சியைச் சேர்ந்த அருண்குமார் (27), ராஜா முகமது (26), சென்னை எண்ணூரைச் சேர்ந்த ரஞ்சித் (30), புளியந்தோப்பைச் சேர்ந்த ஜெயசீலன் (32) ஆகியோரை டிஎஸ்பிக்கள் வீமராஜ், சுருளிராஜா தலைமையிலான தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
     மேலும், கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனைக் கைதியான விழுப்புரம் கல்லூரி சாலை இருசப்பன் (40), தன்னுடன் சிறையில் உள்ள தனசேகரனின் உதவியுடன் கூலிப்படையை அனுப்பி, செல்வராஜை கொலை செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
     இருசப்பனின் ஆதரவாளரான பத்தர் செல்வம் கொலை வழக்கில் தொடர்புடைய அறிவழகனுக்கு ஆதரவாக செல்வராஜ் செயல்பட்டு வந்ததால், அவரைக் கொலை செய்ய சிறையிலேயே திட்டம் தீட்டியுள்ளனர்.
     இருசப்பனுடன் சிறையிலிருந்த எண்ணூர் தனசேகரன் மூலம், அவரது குழுவினர் விழுப்புரத்துக்கு வந்து பாத்திரக் கடை உரிமையாளர் தேவேந்திர பாண்டியனின் இடத்தில் தங்கினராம்.
     இருசப்பனின் வளர்ப்பு மகனான அப்பு, அசார் ஆகியோர் துணையுடன் செல்வராஜின் நடவடிக்கைகளைக் கண்காணித்து, நடைப்பயிற்சிக்காக வந்த அவரை அப்பு, அசார், ரஞ்சித், தியாகு உள்ளிட்ட 6 பேர் பைக்கில் சென்று வெட்டிக் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
     இதையடுத்து, விழுப்புரம் நகர போலீஸார் அப்பு, அசார் உள்ளிட்ட 11 பேரை திங்கள்கிழமை கைது செய்து, விழுப்புரம் முதலாவது நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர். இதில் இருசப்பன், தனசேகரனை கடலூர் சிறையில் வைத்து கைது செய்தனர்.
     எண்ணூரைச் சேர்ந்த ரௌடி ஹரி உள்ளிட்ட சிலரை தனிப் படை போலீஸார் தேடி வருகின்றனர்.
     கைதானவர்களிடமிருந்து 2 சொகுசு கார்கள், 2 பைக்குகள், 5 அரிவாள்கள், 10 செல்லிடப்பேசிகள், 11 நாட்டு வெடிகுண்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
     எஸ்.பி. பேட்டி: விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. நரேந்திரன் நாயர் கூறியது:
     திமுக பிரமுகர் செல்வராஜ் கொலை சம்பவம் அரசியல் நோக்கமல்ல. இந்த வழக்கில் கைதான தனசேகர், தியாகு உள்ளிட்ட கும்பல், பல்வேறு குற்ற வழக்குகள் தொடர்பாக சென்னை போலீஸாரால் தேடப்பட்டு வந்தவர்கள்.
     இந்தச் சம்பவத்தில் பணப்பரிமாற்றம் குறித்தும், சதித் திட்டத்துக்கு காரணமானவர்கள் குறித்தும் விசாரித்து வருகிறோம் என்றார் அவர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai