சுடச்சுட

    

    ஆசிரியரை காரில் கடத்தி பணம், நகைப் பறிப்பு

    By விழுப்புரம்,  |   Published on : 21st September 2016 09:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசுப் பள்ளி ஆசிரியரை காரில் கடத்திச் சென்று ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் நகை பறிக்கப்பட்டது.
     புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தைச் சேர்ந்தவர் பாலு(53). இவர், விக்கிரவாண்டி அருகே வி.பகண்டையில் உள்ள அரசுப் பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், செவ்வாய்க்கிழமை மாலை புதுச்சேரிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இரவு 7.30 மணி அளவில் பக்கிரிப்பாளையம் பகுதியில் காரில் வந்த இருவர், இவரை காரில் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. அவரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் ரொக்கம், சுமார் 3 பவுன் நகை மற்றும் செல்லிடப்பேசி ஆகியவற்றை பறித்துக்கொண்டு, புதுச்சேரி காட்டேரிக்குப்பம் பகுதியில் விட்டுச் சென்றது.
     இது தொடர்பாக விழுப்புரம் டிஎஸ்பி சுருளிராஜன் மற்றும் கண்டமங்கலம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai