சுடச்சுட

    

    இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்: 50 பேர் கைது

    By விழுப்புரம்,  |   Published on : 21st September 2016 09:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரத்தில் அனுமதியின்றி செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
     இந்து முன்னணி திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளர் சங்கர்கணேஷ் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து, விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே இந்து முன்னணி சார்பில் செவ்வாய்க்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
     மாவட்டத் தலைவர் பாலு தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ஏழுமலை, மாவட்டச் செயலாளர்கள் ராமு, சிவசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     மாநிலச் செயலாளர் மனோகர் கண்டன உரையாற்றினார். பாஜக மாவட்ட துணைத் தலைவர் சுகுமார், இந்து முன்னணி நிர்வாகிகள் தரணிதரன், பாஸ்கர், வளவன், ஆனந்தபாண்டியன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
     தமிழகத்தில் இந்து அமைப்பினர் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்து அமைப்புத் தலைவருக்கு பாதுகாப்பு இல்லை, திண்டுக்கல் மாவட்ட இந்து முன்னணி பொறுப்பாளர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
     இந்நிலையில், அங்கு அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாகக் கூறி அவர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai