சுடச்சுட

    

    முதியோர் உதவித்தொகை கோரி இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல்) பிரிவைச் சேர்ந்த பெண்கள் செவ்வாய்க்கிழமை வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
     முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மற்றும் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில், செஞ்சி வட்டாட்சியர் அலுவலகம் முன் உண்ணாவிரதப் போராட்டம் 20-ம் தேதி நடைபெற இருந்தது.
     ஆனால், இதற்கு போலீஸார் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை செஞ்சி வட்டாட்சியரிடம் அக் கட்சி நிர்வாகிகள் அளித்தனர்.
     இதுகுறித்து, மாவட்டச் செயலர் வெங்கடேசன் தெரிவித்தது: 20-ம் தேதி வட்டாட்சியர் அலுவலகம் முன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருந்தோம். காவல் துறை அனுமதி மறுத்ததை அடுத்து, வட்டாட்சியர் தலைமையில் 19-ம் தேதி சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதி அளித்திருந்தனர். ஆனால், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றுவிட்டதால் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இந்நிலையில் 20-ம் தேதி வருமாறு கூறிவிட்டார்கள.
     செஞ்சி தனி வட்டாட்சியரிடம் 8 முறை மனு அளித்தும் முதியோர் உதவித்தொகை 18 பேருக்கு இன்று வரை வழங்கப்படவில்லை. இவர்களில் பலர் விதவைகள், வீடு இல்லாதவர்கள், ஆண் வாரிசு இல்லாதவர்கள், வயதானவர்கள். எனவே, இவர்களுக்கு உடனே உதவித்தொகை வழங்க ஆட்சியரும், வட்டாட்சியரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார். பகுதிச் செயலர் ஆர்.சுசிலா, குழு உறுப்பினர் பாவாடை, நிர்வாகிகள் கணேசன், சக்தி, ஜெயா, ராணி, சிவகாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai