Enable Javscript for better performance
ஊராட்சித் தலைவர் பதவி ஒதுக்கீடு:  ஆட்சியரிடம் மக்கள் கோரிக்கை மனு- Dinamani

சுடச்சுட

    

    ஊராட்சித் தலைவர் பதவி ஒதுக்கீடு:  ஆட்சியரிடம் மக்கள் கோரிக்கை மனு

    By திருக்கோவிலூர்,  |   Published on : 21st September 2016 09:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உள்ளாட்சித் தேர்தலில் சீர்ப்பாதநல்லூர் ஊராட்சித் தலைவர் பதவிக்கான ஒதுக்கீடு தொடர்பாக ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
     ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்கு உள்பட்ட சீர்ப்பாதநல்லூர் ஊராட்சித் தலைவர் பதவி பழங்குடியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சமூகத்தினர் யாரும் இந்த ஊரில் வசிக்கவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
     இந்நிலையில் இக்கிராமத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் விழுப்புரத்துக்குச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், சீர்ப்பாதநல்லூர் கிராமத்தில் இல்லாத சமூகத்தினரான பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட வேண்டும் என இடஒதுக்கீட்டின் மூலம் தெரியவந்துள்ளது.
     இது தொடர்பாக மறுபரிசீலனை செய்து, கிராமத்தில் உள்ள ஒட்டுமொத்த சமூகத்தினர்கள் யார்வேண்டுமானாலும் ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட வாய்ப்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தது.
     மனுவை பெற்ற ஆட்சியர் எல்.சுப்பிரமணியன், உரிய விசாரணை அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாராம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai