சுடச்சுட

    

    ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

    By விழுப்புரம்,  |   Published on : 21st September 2016 09:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு மண்டலத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். பொருளாளர் சேஷயன் வரவேற்றார்.
     தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக அனைத்து ஓய்வூதியர் சங்க மாநிலச் செயலாளர் பக்கிரிசாமி, மாநில துணைச் செயலாளர் சகாதேவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
     கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்ட பணப் பலன்களையும், சேமநல நிதியையும் வழங்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கு பஞ்சப்படி அமல்படுத்தும்போதே, ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கும் பஞ்சப்படியை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
     விழுப்புரம், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai