Enable Javscript for better performance
கடல் அரிப்பைத் தடுக்க ஆட்சியரிடம் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    கடல் அரிப்பைத் தடுக்க ஆட்சியரிடம் கோரிக்கை

    By விழுப்புரம்,  |   Published on : 21st September 2016 09:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோட்டக்குப்பம் பகுதியில் கடல் அரிப்பைத் தடுக்க தூண்டில்முள் வளைவு (கருங்கற்கள்)அமைக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் மீனவ மக்கள் கோரிக்கை வைத்தனர்.
     மாவட்டத்தில், கடலோரத்தில் உள்ள 19 மீனவ கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பேரிடர் பாதுகாப்பு மையங்களை, ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
     பொம்மையார்பாளையம் கடலோரப் பகுதிகளில் அவர் ஆய்வு செய்தபோது, பஞ்சாயத்துத் தலைவர் சிவானந்தம் தலைமையிலான மீனவ மக்கள், ஆட்சியரிடம் தங்கள் குறைகளை தெரிவித்தனர். கோட்டக்குப்பம் கடலோர கிராமப் பகுதிகளில், சுனாமியைத் தொடர்ந்து, கடந்த சில ஆண்டுகளாக கடல் அரிப்பு தொடர்கிறது.
     இதற்கு தூண்டில் முள்வளைவு (கருங்கற்கள்) அமைத்து பாதுகாக்க வேண்டும் என்று நீண்ட காலமாக மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
     கடல் அரிப்பிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பொம்மையார்பாளையம் மயானப் பாதை கடலரிப்பில் விழுந்துவிட்டது. மாற்றுப் பாதையை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றனர். இதுகுறித்து, விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் உறுதியளித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai