சுடச்சுட

    

    குடிநீர் பிரச்னை: விழுப்புரத்தில் 2ஆவது நாளாக போராட்டம்

    By விழுப்புரம்,  |   Published on : 21st September 2016 09:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம் வழுதரெட்டி பகுதியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     வழுதரெட்டி காலனிப் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாக அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை காலிக் குடங்களுடன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, நகராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
     இந்நிலையில், அப்பகுதி மக்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட செவ்வாய்க்கிழமை வழுதரெட்டி நெடுஞ்சாலைப் பகுதியில் திரண்டனர்.
     தகவல் அறிந்த வட்டாட்சியர் வெற்றிவேல், வருவாய் ஆய்வாளர் சாதிக்அலி, தாலுகா காவல் ஆய்வாளர் செந்தில்விநாயகம் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
     வழுதரெட்டி காலனிப் பகுதியில் உள்ள குடிநீர்த் தொட்டிகளில் போதிய தண்ணீர் நிரம்பாமல் உள்ளதால், கடந்த சில மாதங்களாக தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது.
     இங்குள்ள துணிக்கடை, மண்டபம் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் தண்ணீரை மோட்டார் போட்டு உறிஞ்சுவதால், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.
     இதையடுத்து, தாற்காலிகமாக லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் மாற்று இடத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்து தண்ணீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையேற்று, அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai