Enable Javscript for better performance
கோயிலின் கூரையை வனத் துறை அகற்றம்: கிராம மக்கள் எதிர்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    கோயிலின் கூரையை வனத் துறை அகற்றம்: கிராம மக்கள் எதிர்ப்பு

    By செஞ்சி,  |   Published on : 21st September 2016 10:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செஞ்சி அருகே மலை மீது உள்ள சிவன் கோயிலின் மேற்கூரை வனத்துரையினரால் அகற்றப்பட்டதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
     செஞ்சி அருகே பாக்கம் கிராமத்தில் சக்தி மலை மீது சிவன் கோயில் உள்ளது.
     திறந்த வெளியில் இருந்த இந்தக் கோயிலுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு தகர தகடுகளைக் கொண்டு கூரை அமைத்தனர். இந்நிலையில், கடந்த 19ஆம் தேதி, வனவர் ராதா தலைமையில் ரோந்து வந்த வனக் காவலர்கள் தகர தகடுகளை அகற்றினர். இதனால், பாக்கம் கிராம மக்கள் அங்கு சூழ்ந்தனர். வனத் துரையினரின் இச்செயலைக் கண்டித்து சாலை மறியல் செய்தனர்.
     தகவல் அறிந்து வந்த செஞ்சி டி.எஸ்.பி., ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் அமுதா, பழனி மற்றும் போலீஸôர் கிராம மக்களை சமாதானம் செய்து மறியலை கைவிடச் செய்தனர்.
     இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பாக்கம் ஊராட்சித் தலைவர் அஞ்சலை செல்வகுமார் மற்றும் 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் செஞ்சி டி.எஸ்.பி. ரவிச்சந்திரனிடம் மீண்டும் கோயிலுக்கு கூரை அமைக்க ஏற்பாடு செய்யும்படி மனு கொடுத்தனர். மேலும், வட்டாட்சியர் செல்வராணியிடமும் மனு கொடுத்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai