சுடச்சுட

    

    செஞ்சி அருகே கோயில் முன் கேட்பாரற்றுக் கிடந்த 3 மாதங்களே ஆன பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது.
     செஞ்சி-விழுப்புரம் சாலையில் விநாயகபுரம் என்ற இடத்தில் உள்ள விநாயகர் கோயில் முன் திங்கள்கிழமை நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இதையடுத்து, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு சென்று பார்த்தபோது விநாயகர் சிலை முன் துணியில் ஆண் குழந்தை கிடத்தப்பட்ட நிலையில் அழுது கொண்டிருந்தது.
     குழந்தை பிறந்து 3 மாதங்கள் இருக்கும் எனத் தெரிகிறது.
     இதையடுத்து, 108 அவசரகால ஊர்தி மூலம் அக்குழந்தை, செஞ்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
     இதுகுறித்து, செஞ்சி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai