Enable Javscript for better performance
திமுக நகரச் செயலர் கொலை: மேலும் மூவரிடம் விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    திமுக நகரச் செயலர் கொலை: மேலும் மூவரிடம் விசாரணை

    By விழுப்புரம்,  |   Published on : 21st September 2016 09:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம் திமுக நகரச் செயலர் கொலை வழக்கில் தொடர்புடையதாக, மேலும் 3 பேரை பிடித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
     திமுக விழுப்புரம் நகரச் செயலர் செல்வராஜ் கடந்த 14-ஆம் தேதி காலை நடைப்பயிற்சி சென்றபோது கூலிப்படையினரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
     இதுகுறித்து விழுப்புரம் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
     இதைத் தொடர்ந்து, டிஎஸ்பிகள் வீமராஜ், சுருளிராஜன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகள் தேடப்பட்டு வந்தனர்.
     இதில், சென்னை, திருச்சி, காஞ்சிபுரம், விழுப்புரத்தைச் சேர்ந்த கூலிப்படையினர் 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.
     இந்நிலையில், இக்கொலையில் தொடர்புடையதாக மேலும் 3 பேரை தனிப்படை போலீஸார் செவ்வாய்க்கிழமை பிடித்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai