சுடச்சுட

    

    திருக்கோவிலூர் பேருந்து நிலையம் இன்று திறப்பு

    By திருக்கோவிலூர்,  |   Published on : 21st September 2016 09:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     திருக்கோவிலூரில் விரிவுபடுத்தப்பட்ட பேருந்து நிலையத்தை, முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை (செப்.21) திறந்து வைக்கிறார்.
    திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தை ரூ.2 கோடி மதிப்பீட்டில் விரிவுபடுத்த அரசு நடவடிக்கை எடுத்தது.
    அதனடிப்படையில், கடந்த ஓராண்டாக பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில், பேருந்து நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
    தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னையில் இருந்தவாறு காணொலிக் காட்சி மூலம் இப்பேருந்து நிலையத்தை புதன்கிழமை திறந்து வைக்கிறார்.
    திறப்பு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருக்கோவிலூர் பேரூராட்சி நிர்வாகம் செய்துள்ளது.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai