சுடச்சுட

    

    பத்திரப் பதிவுத் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

    By கள்ளக்குறிச்சி,  |   Published on : 21st September 2016 09:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கள்ளக்குறிச்சி நில உரிமையாளர்கள், தரகர்கள், முகவர்கள் நலச் சங்கம் சார்பில் பத்திரப் பதிவு துறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
     மாவட்ட பதிவாளர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற
     இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவர் ஆர்.வேலு தலைமை வகித்தார்.
     துணைத் தலைவர் கே.மருதுப்பிள்ளை, எம்.வீ.எஸ்.வீரமுத்து, கே.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் என்.வேலுப்பிள்ளை வரவேற்றார். பழைய மனை பிரிவுகளை கிரையம் செய்திட வேண்டும், வழிகாட்டி மதிப்பை குறைத்திட வேண்டும், பதிவுத் துறையில் எந்த ஒரு அறிவிப்பாக இருந்தாலும் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் இணைச் செயலர்கள் ஆர்.ஆர்.ரவி, அ.அருண்கென்னடி, கே.முகமது யாசின் உள்பட பலர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai