சுடச்சுட

    

    பருவமழை: கடலோர கிராமங்களில் ஆட்சியர் ஆய்வு

    By விழுப்புரம்,  |   Published on : 21st September 2016 09:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி கடலோர கிராமங்களில் பாதுகாப்புப் பணிகள் குறித்து ஆட்சியர் செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
     விழுப்புரம் மாவட்டத்தில் கடந்தாண்டு பருவமழையின் போது, கடலோர கிராமங்களை உள்ளடக்கிய வானூர், மரக்காணம், கோட்டக்குப்பம் பகுதிகளில் மழைநீர் தேங்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
     இதனையொட்டி, வரும் வடகிழக்கு பருவமழையின் போது, கடலோர கிராமங்களில் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டிய பணிகள் குறித்தும், அங்குள்ள பேரிடர் கால பாதுகாப்பு மையங்களையும் நேரில் பார்வையிட்டு ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
     கோட்டக்குப்பம் பேரூராட்சி பக்கிலி வாய்க்கால் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு, அப்பகுதியில் மழைநீர் தேங்காத வகையில் வெளியேற்ற பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தண்ணீர் வெளியேற வரத்து வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்று பொதுப்பணித்துறையினரிடம் அறிவுறுத்தினார். இதனையடுத்து, கோட்டக்குப்பம் பேரிடர் கால பாதுகாப்பு மையத்தை பார்வையிட்டு, அங்கு மக்கள் தங்கும் அறைகள், குடிநீர், மின்சாரம், கழிப்பிடம், ஜெனரேட்டர் வசதிகளை பராமரித்திட வேண்டும் என்றார்.
     தொடர்ந்து, பொம்மையார்பாளையம் பேரிடர் கால பாதுகாப்பு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், தாழங்காடு பக்கிங்காம் கால்வாய் கரையோர முகத்துவாரங்களை பார்வையிட்டு அகலப்படுத்தவும், பலப்படுத்தவும் உத்தரவிட்டார்.
     அழகர்குப்பம், ஈக்கராங்குப்பம், மண்டவாய்ப்புதுபாக்கம், பனிச்சமேடு, அனுமந்தைக்குப்பம், செட்டிநகர், நொச்சிக்குப்பம், கீழ்ப்புத்துப்பட்டு, பெரியமுதலியார்சாவடி ஆகிய கடலோரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பேரிடர் கால பாதுகாப்பு மையங்களையும் ஆட்சியர் பார்வையிட்டு மழைக்குள் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
     திண்டிவனம் உதவி ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், கோட்டாட்சியர் ஜீனத்பானு, வட்டாட்சியர்கள் எம்.காமாசிங், பாலச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai