சுடச்சுட

  

  புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து மாணவர் சங்கத்தினர் போராட்டம்

  By விழுப்புரம்,  |   Published on : 21st September 2016 09:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, விழுப்புரத்தில் புரட்சிகர இளைஞர் மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
   மத்திய அரசு தயாரித்துள்ள புதிய கல்விக் கொள்கையில், கல்வியை தனியார் வசம் ஒப்படைப்பது, வெளிநாட்டு பல்கலைக் கழகங்களை அனுமதிப்பது, கல்வி நிறுவனங்களுக்கு உதவித்தொகை நிறுத்தப்படும் போன்ற பல்வேறு பாதகமாக அம்சங்கள் உள்ளன. ஆகவே, புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தக் கூடாது. இந்தி மற்றும் சம்ஸ்கிருதம் மொழியை திணிக்கக் கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
   விழுப்புரம் தாலுகா காவல் நிலையம் அருகே மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஞானவேல்ராஜா தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். போராட்டத்தின்போது, புதிய கல்விக் கொள்கையின் வரைவு நகல் எரிக்கப்பட்டது.
   இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஞானவேல்ராஜ் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai