சுடச்சுட

  

  போலி பத்திரம் தயாரித்து ரூ.50 லட்சம் நிலம் விற்பனை: 4 பேர் மீது வழக்கு

  By விழுப்புரம்,  |   Published on : 21st September 2016 09:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருக்கோவிலூர் அருகே பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி, போலி பத்திரம் தயாரித்து ரூ.50 லட்சம் மதிப்பிலான நிலத்தை விற்பனை செய்ததாக 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
   விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் அருகேயுள்ள சத்தியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் குருசாமி(75). இவருக்கு அதே ஊரின் பிரதான பகுதியில் 43 சென்ட் நிலம் உள்ளது. நிலத்தின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் இருக்கும். அண்மையில், குருசாமி தனது நிலத்தை பரிசோதித்து பார்த்தபோது, அது வேறு பெயருக்கு கிரையம் செய்யப்பட்டிருப்பது அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
   இதுகுறித்து, கடந்த ஆகஸ்ட் மாதம் விழுப்புரம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவில் குருசாமி புகார் செய்தார். ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் போலீஸார் விசாரித்தனர்.
   விசாரணையில், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த மற்றொரு அருணாச்சலம் மகன் குருசாமி என்பவருக்குச் சொந்தமாக அங்கு 74 சென்ட் நிலம் இருந்துள்ளது. குருசாமி இறந்த நிலையில், அவரது சகோதரர் மணிவேல்(62), இறந்த குருசாமியின் மனைவி லட்சுமி(60), இவர்களின் உறவினர் கமலா என்கிற கமலாம்பாள்(65) ஆகியோர் சேர்ந்து பெயர் ஒன்றுமையை பயன்படுத்தி, போலி பத்திரம் தயாரித்து, தற்போதுள்ள குருசாமியின் 43 சென்ட் நிலத்தை, செஞ்சியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் ரங்கநாதன்(60) என்பவருக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.
   இதுதொடர்பாக மணிவேல், லட்சுமி, கமலாம்பாள், ரங்கநாதன் ஆகியோர் மீது நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai