Enable Javscript for better performance
மயங்கி விழுந்து விவசாயி சாவு- Dinamani

சுடச்சுட

    

    கோட்டக்குப்பம் அருகே பேருந்து நிறுத்தத்தில் மயங்கி விழுந்த விவசாயி உயிரிழந்தார்.
     திருவெண்ணெய்நல்லூர் அடுத்த தையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியபெருமாள்(66). விவசாயி. உடல்நிலை பாதிக்கப்பட்டு திருவெண்ணெய்நல்லூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
     இவர், கடந்த திங்கள்கிழமை கோட்டக்குப்பம் பகுதியில் உள்ள உறவினரை பார்க்கச் சென்றார். பின்னர், அங்கிருந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குச் செல்ல கனகசெட்டிக்குளம் பேருந்து நிறுத்தத்துக்குச் சென்றார். அப்போது, அங்கு கலியபெருமாள் திடீரென மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது.
     அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு புதுச்சேரி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். கலியபெருமாளை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, கோட்டக்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai