Enable Javscript for better performance
மொபெட்டில் இருந்து விழுந்த மாணவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    விழுப்புரம் அருகே மொபெட்டில் இருந்து விழுந்து காயமடைந்த பள்ளி மாணவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
     விழுப்புரம் அருகே கண்டமானடி அடுத்துள்ள வி.அரியலூர் கிராமத்தைச் சேர்ந்த லேஸ் மகன் லோகநாதன்(14). இவர், கண்டமானடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
     கடந்த ஞாயிற்றுக்கிழமை லோகநாதன் மொபெட்டில் அருகேயுள்ள குச்சிப்பாளையம் சென்றார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக சாலை பள்ளத்தில் மொபெட் இறங்கியதில், நிலை தடுமாறி லோகநாதன் கீழே விழுந்துள்ளார்.
     இதில், காயமடைந்த அவரை விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து, தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட லோகநாதன் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.
     இதுகுறித்து, விழுப்புரம் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai