சுடச்சுட

    

    வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் கம்யூனிஸ்ட் போராட்டம்

    By விழுப்புரம்,  |   Published on : 21st September 2016 09:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோரிக்கைகளை வலியுறுத்தி வானூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     போராட்டத்துக்கு கட்சியின் வானூர் வட்ட துணைச் செயலர் முத்துசாமி தலைமை வகித்தார். தேசியக்குழு உறுப்பினர் புதுவை நாரா.கலைநாதன், மாவட்டச் செயலாளர் ஏ.வி.சரவணன், வானூர் ஒன்றியச் செயலர் சகாபுதீன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். நிர்வாகக் குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் சேகர், சின்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     திருச்சிற்றம்பலம் ஊராட்சி நாவற்குளம் பகுதியில் கட்டப்பட்டு ஓராண்டாகியும் பயன்பாடின்றி இருக்கும், 3 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.
     மேலும், கருமாதி கொட்டகை, எரிகொட்டகை அமைத்துத் தர வேண்டும். அங்குள்ள கலைவாணர் நகர், வசந்தம் நகர் பகுதியில் 450 குடும்பங்கள் வரை கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். அவர்களுக்கு, இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும்.
     நாவற்குளம் பகுதியில் சாலையை கடந்து செல்லும் கால்வாய்கள் மீது இணைப்புப் பாலம் அமைத்துத் தர வேண்டும். சிறுபாலங்களை சீர்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கம்யூனிஸ்ட் கட்சியினர் சங்கு ஊதி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai