சுடச்சுட

    

    வழக்கில் ஆஜராகாதவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

    By செஞ்சி,  |   Published on : 21st September 2016 09:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொலை முயற்சி வழக்கில் கடந்த 2 ஆண்டுகளாக செஞ்சி நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தவரை, நீதிமன்றம் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது.
     செஞ்சி சக்கராபுரம் பழைய காலனியைச் சேர்ந்தவர் வீராசாமி மகன் ஆனந்தவேலு. இதே பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் மகன் வினோத்குமார்(25). இருவருக்கும் செஞ்சி-திண்டிவனம் சாலையில் உள்ள ஒரு துரித உணவகத்தில் கடந்த 2011-ல் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, வினோத்குமார் ஆனந்தவேலுவை சோடா பாட்டிலால் குத்திவிட்டாராம். இதுகுறித்த புகாரின் பேரில், செஞ்சி போலீஸார் வினோத்குமாரை கைது செய்து, அவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு செஞ்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வினோத்குமார் தற்போது ஜாமினில் உள்ளார்.
     இந்நிலையில், வினோத்குமார் வழக்கு விசாரணைக்காக கடந்த 2 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகவில்லையாம்.
     இதையடுத்து, நீதிமன்றம் அவரை தேடப்படும் குற்றவாளியாக திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai