சுடச்சுட

    


    விவசாயிகளுக்கு நிரந்தர வருவாய் கிடைத்திட 50 சதவீத மானியத்தில் கறவை மாடுகள் வழங்கப்படுகிறது என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
     விழுப்புரத்தில் அரசின் நலத்திட்ட உதவி வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
     இதில், வேளாண்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த நவீன தொழில்நுட்பங்கள் குறித்த கண்காட்சியை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்து, நலத்திட்டங்கள் வழங்கிப் பேசியது:
     நிலத்தின் வளம் அறிந்து பயிர் செய்தால் மகசூல் அதிகரிக்கும் மாவட்டத்தில் உள்ள 5.40 லட்சம் விவசாயிகளுக்கும் இந்தாண்டுக்குள் மண்வள அட்டைகள் வழங்கப்படும். விவசாயத் தொழிலாளர் பற்றாக்குறையால், பண்ணை இயந்திர மயமாக்குதல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு விவசாய இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கு நிலையான வருவாய் கிடைத்திட வேளாண்மை திட்டத்தில் 50 சதவீத மானியத்தில் கறவை மாடுகள் வழங்கப்படுகிறது. நமது மாவட்டத்தில், நடப்பாண்டு 8 வட்டாரங்களில், வட்டாரத்துக்கு ஒரு கிராமம் வீதம் தேர்வு செய்யப்பட்டு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றார்.
     விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜசேகரன், வேளாண் இணை இயக்குநர் ராமலிங்கம், துணை இயக்குநர்கள் செல்வசேகர், இளவரசன், உதவி இயக்குநர் கென்னடிஜெபக்குமார், வேளாண் அலுவலர்கள் சுரேஷ், செந்தில்குமார், கங்காகெüரி, தேன்மொழி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai