Enable Javscript for better performance
அரசுக் கட்டடங்கள்: காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்- Dinamani

சுடச்சுட

    

    அரசுக் கட்டடங்கள்: காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

    By திருக்கோவிலூர்,  |   Published on : 22nd September 2016 08:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சங்கராபுரம் ஒன்றியத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசுக் கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தார்.
     சங்கராபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட வடபொன்பரப்பி கிராமத்தில் பயணியர் நிழற்குடை, வடகீரனூர் கிராமத்தில் கிராம சேவை மையக் கட்டடம், மூங்கில்துறைப்பட்டு கிராமத்தில் ஊராட்சி அலுவலகக் கட்டடம் ஆகியவை புதிதாக கட்டப்பட்டுள்ளன.
     இக்கட்டடங்களை, தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தார். இந்த கிராமங்களில் நடைபெற்ற திறப்பு விழாவில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரைமுருகன், கலைச்செல்வி, ஒன்றியக் குழுத் தலைவர் எஸ்.எஸ்.அரசு, துணைத் தலைவர் ஆர்.திருமால், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் டி.பவுல்ராஜ், ஊராட்சித் தலைவர்கள் ஷம்ஷாத்பேகம் ஷாஜகான், சரிதா நாசீர், மைதிலி சக்கரவர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai