சுடச்சுட

    

    விழுப்புரம் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்தனர்.
     சென்னையில் இருந்து திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்ட அரசுப் பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.
     இப்பேருந்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு விழுப்புரம் அருகே சென்றபோது, விராட்டிக்குப்பம் புறவழிச் சாலையில் உள்ள பகுதியில் முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
     இதில் பேருந்தில் பயணம் செய்த திருக்கோவிலுர் வேலாம்புதுரைச் சேர்ந்த ஏழுமலை (45), இவரது மனைவி மஞ்சுளா (35), அரியலூர், உடையார்பாளையத்தைச் சேர்ந்த செல்வம் (40), திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி சந்திரகுமாரி (50), விருத்தாசலம் அருகே வயலூரைச் சேர்ந்த மதியழகன் மகன் பிரபு (18), தனக்கண்ணு மகன் மணிகண்டன் (21), கணேசன் மகன் விக்னேஷ் (21), மணப்பாறையச் சேர்ந்த வெள்ளத்துரை (40), வந்தவாசியைச் சேர்ந்த விஜயராகவன் (34), மதுரையைச் சேர்ந்த ஆதவன் (60) உள்பட 15 பேர் காயமடைந்தனர்.
     விபத்து குறித்து தகவலறிந்து வந்த விழுப்புரம் தாலுகா போலீஸார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு, முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து, மீட்பு வாகனம் மூலம் மீட்கப்பட்டது.
     இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai