சுடச்சுட

    

    ஆவின் பால் கலப்பட வழக்கு: அக்டோபர் 24-க்கு ஒத்திவைப்பு

    By விழுப்புரம்,  |   Published on : 22nd September 2016 08:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆவின் பால் கலப்பட வழக்கு தொடர்பான விசாரணையை அக்டோபர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
     விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள வெள்ளிமேடுபேட்டையில் கடந்த 2014ஆம் ஆண்டு ஆவின் பால் டேங்கர் லாரியில் பாலை திருடி, தண்ணீர் ஊற்றி கலப்படம் செய்ததாக, 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.
     இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீஸார், டேங்கர் லாரி ஒப்பந்ததாரரான சென்னை அசோக் நகரைச் சேர்ந்த வைத்தியநாதன், அவரது மனைவி ரேவதி உள்ளிட்ட 23 பேரை கைது செய்தனர். மேலும், பால் தரக்கட்டுப்பாட்டு அலுவலர் அப்துல் ரஹீம் உள்பட மொத்தம் 26 பேர் மீதும், இரு ஒப்பந்த நிறுவனங்கள் மீதும் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
     இந்த வழக்கு நீதிபதி சுபா அன்புமணி முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வைத்தியநாதன், ரேவதி உள்ளிட்ட 6 பேர் ஆஜராகவில்லை. இதையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணையை அக்டோபர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் அனைவரும் ஆஜராகி குற்ற நகலைப் பெற வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai