Enable Javscript for better performance
உள்ளாட்சித் தேர்தல்: வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    உள்ளாட்சித் தேர்தல்: வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு

    By உளுந்தூர்பேட்டை  |   Published on : 22nd September 2016 08:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உளுந்தூர்பேட்டை தொகுதிக்குள்பட்ட திருநாவலூர் ஒன்றியப் பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் மையமாக களமருதூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
     வாக்கு எண்ணிக்கையின்போது வேட்பாளர்கள், வாக்குச் சாவடி முகவர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் வாக்கு எண்ணிக்கையைப் பார்வையிடுவது, சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாமல் பாதுகாப்பது குறித்து அப்போது அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, மாற்று இடமாக தேர்வு செய்யப்பட்டுள்ள திருநாவலூர் அன்னை தெரசா பொறியியல் கல்லூரியிலும் அவர் ஆய்வு செய்தார்.
     உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி ராதாகிருஷ்ணன், திருநாவலூர் காவல் ஆய்வாளர் பி.ராஜேந்திரன், உளுந்தூர்பேட்டை வருவாய் வட்டாட்சியர் ராஜேந்திரன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai