சுடச்சுட

    

    விழுப்புரத்தில் கணினி பழுதுபார்ப்பு கடையில் புதன்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.
     பூந்தோட்டம் ரங்கநாதன் தெருவைச் சேர்ந்த ராஜவேல் மகன் வெற்றிவேல் (36). இவர், திருச்சி சாலையில் கணினி விற்பனையகம் மற்றும் பழுதுபார்ப்பு கடை ஆகியவை தனித்தனியே வைத்துள்ளார்.
     இந்நிலையில் புதன்கிழமை இரவு 7.45 மணியளவில் அப்பகுதியில் இருந்த டிரான்ஸ்பார்மர் பழுதானதால், அங்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால், வெற்றிவேல் உள்ளிட்ட கடை ஊழியர்கள், கடையை அடைத்துவிட்டு வெளியே தேநீர் அருந்தச் சென்றனர்.
     பின்னர் வந்து கடையைத் திறந்தபோது, அறை முழுவதும் புகை மூட்டமாக இருந்ததுடன், உள்ளே இருந்த பொருள்கள் தீப்பற்றி எரிந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
     உடனே, விழுப்புரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். மாவட்ட உதவி அலுவலர் தாமோதரன் மற்றும் நிலைய அலுவலர் (பொ) குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்தத் தீ விபத்தில் கடையில் இருந்த 30-க்கும் மேற்பட்ட மடிக் கணினிகள்,
     10 கணினிகள், உதிரி பாகங்கள், பழுதுபார்ப்பு கருவிகள் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து சேதமாகின. இதன் மதிப்பு சுமார் 10 லட்சமாகும்.
     மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து விழுப்புரம் மேற்கு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai