Enable Javscript for better performance
குடிநீர் விநியோகம் பாதிப்பு: நகராட்சி மேற்பார்வையாளர் இடை நீக்கம்- Dinamani

சுடச்சுட

    

    குடிநீர் விநியோகம் பாதிப்பு: நகராட்சி மேற்பார்வையாளர் இடை நீக்கம்

    By விழுப்புரம்,  |   Published on : 22nd September 2016 08:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வழுதரெட்டி பகுதியில் முறையாகக் குடிநீர் விநியோகம் செய்யப்படாததால், நகராட்சிப் பொதுப்பணி மேற்பார்வையாளரை நகராட்சி ஆணையர் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
     விழுப்புரம், வழுதரெட்டி பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் பிரச்னை இருந்து வரு
     கிறது. அங்குள்ள சில தனியார் நிறுவனங்கள் குடிநீரை மோட்டார் வைத்து உறிஞ்சி எடுத்துக் கொள்வதாகவும், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிக்கு நீர் ஏற்றும் மோட்டார் பழுதானதால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்தது. இது குறித்து அப்பகுதி வார்டு உறுப்பினர், தலைவருக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், அதிகாரிகள் இதனைக் கண்டு கொள்ளவில்லை என்றும் கூறி திங்கள்கிழமை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
     தொடர்ந்து, செவ்வாய்க்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால், வட்டாட்சியர் வெற்றிவேல், வருவாய் அலுவலர் சாதிக் அலி உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து, போராட்டம் கைவிட்டப்பட்டது.
     இந்நிலையில் வழுதரெட்டி பகுதிக்கு முறையாகக் குடிநீர் வழங்காமல் மெத்தனம் காட்டிய அதிகாரிகள், பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன், நகராட்சி ஆணையர் (பொ) மங்கையற்கரசிக்கு உத்தரவிட்டார்.
     இதனையடுத்து, நகராட்சி ஆணையர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு, முறையாக குடிநீர் விநியோகம் செய்யத் தவறியதாகக் கூறி, நகராட்சிப் பொதுப்பணி மேற்பார்வையாளர் பானுரேகாவை இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai