Enable Javscript for better performance
கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி தள்ளுபடி விற்பனை: ஆட்சியர் தொடங்கி வைத்தார்- Dinamani

சுடச்சுட

    

    கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி தள்ளுபடி விற்பனை: ஆட்சியர் தொடங்கி வைத்தார்

    By விழுப்புரம்  |   Published on : 22nd September 2016 08:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை ஆட்சியர் எல்.சுப்பிரமணியம் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
     இது குறித்து அவர் கூறியதாவது:
     கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை கோ-ஆப்டெக்ஸ் கைத்தறி நிறுவனத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு பல புதிய கைத்தறி ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
     பாரம்பரியம் மிக்க கோ-ஆப்டெக்ஸ் கைத்தறி நிறுவனம், நெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் 81 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றி வருகிறது.
     தீபாவளி விற்பனையாக, கடலூர் மண்டலத்துக்கு ரூ. 15 கோடியும், விழுப்புரம் (முதன்மை) விற்பனை நிலையத்துக்கு ரூ. 1.04 கோடியும் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
     இங்கு மகளிருக்கான இயற்கை சாயமிடப்பட்ட ஆர்கானிக் காட்டன் சேலைகள், நெகமம், கோயம்புத்தூர் காட்டன், கோரா புடவைகள், சேலம், ஜெயங்கொண்டம் காட்டன் புடவைகள் விற்பனைக்கு உள்ளது.
     அதேபோல் ஆண்களுக்கான 100 சதவீதம் பருத்தியால் நெய்யப்பட்ட சட்டைகள் புதிய ரகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
     போர்வைகள், சுடிதார் மெட்டீரியல், திரைச் சீலைகள் ரகங்கள், துண்டு, ரெடிமேட் சட்டைகள், மிதியடிகள் ஆகியவை விற்பனைக்கு உள்ளது.
     ஜனவரி மாதம் 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்தச் சிறப்பு விற்பனையில் 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.
     அரசு மற்றும் அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வட்டியில்லா சுலபத் தவணை கடன் திட்டமும் நடைமுறையில் உள்ளது.
     ரூ. 2,000-க்கும் மேல் துணி வாங்கும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, 5 பேருக்கு முதல் பரிசாக தலா 8 பவுன் நகையும், இரண்டாம் பரிசாக தலா 4 பவுன் நகை 15 பேருக்கும் வழங்கப்பட உள்ளது என்றார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai