சுடச்சுட

    

    திமுக நகரச் செயலர் கொலை: மேலும் ஒருவர் கைது

    By விழுப்புரம்,  |   Published on : 22nd September 2016 08:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம் நகர திமுக செயலர் கொலை வழக்கில் மேலும் ஒரு இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
     விழுப்புரம் நகர திமுக செயலராக இருந்தவர் செல்வராஜ் (45). இவர் கடந்த 14-ஆம் தேதி காலை நடைப்பயிற்சி சென்றபோது, கூலிப்படையினரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
     இது குறித்து விழுப்புரம் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். பின்னர், இது தொடர்பாக டி.எஸ்.பி.கள் வீமாராஜ், சுருளிராஜன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
     இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை இக்கொலை வழக்கில் தொடர்புடையதாக 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.
     மேலும், பானாப்பட்டு பாதையைச் சேர்ந்த குணசேகரன் மகன் அன்புச்செல்வன் (21) உள்ளிட்ட 3 பேரை பிடித்து செவ்வாய்க்கிழமை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
     விசாரணையில் அன்புச்செல்வத்துக்கும் கொலையில் தொடர்பிருப்பது தெரிய வந்ததாம்.
     இதையடுத்து, அன்புச்செல்வனை புதன்கிழமை போலீஸார் கைது சிறையிலடைத்தனர். இக்கொலை வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai