சுடச்சுட

    

    மக்கள் தொடர்பு முகாம்: 33 மனுக்களுக்குத் தீர்வு

    By கள்ளக்குறிச்சி,  |   Published on : 22nd September 2016 08:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தென்கீரனூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 368 மனுக்கள் பெறப்பட்டு, 33 மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டது.
     தென்கீரனூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. கலால் உதவி ஆணையர் ஜெ.முகுந்தன் தலைமை வகித்தார். ஒன்றியக் குழுத் தலைவர் அ.ராஜசேகரன், துணைத் தலைவர் மு.கண்ணன், வட்டாட்சியர் க.ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சித் தலைவர் கோமதி பெருமாள் வரவேற்றார்.
     இதில், சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற க.காமராஜ் எம்.பி., அ.பிரபு எம்.எல்.ஏ., ஆகியோர் பொதுமக்களிடமிருந்து 368 மனுக்களைப் பெற்றனர். அவற்றில் 33 மனுக்கள் மீது உடனடித் தீர்வு காணப்பட்டு அதற்கான ஆணையை வழங்கினர்.
     வேளாண் அலுவலர் அ.அன்பழகன், தோட்டக்கலை உதவி அலுவலர் இ.தனசேகர், கால்நடை உதவி மருத்துவர் சுகம், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மு.சீதா, சுகாதார மேற்பார்வையாளர் வி.ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் அரசின் மூலம் வழங்கப்படும் திட்டங்கள் குறிதது பேசினர்.
     குடிமைப் பொருள் தனி வட்டாட்சியர் பெ.ஜோதிவேல், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அ.கணேசன், தீயணைப்பு நிலைய அலுவலர் ஆர்.ஜமுனா ராணி, நில அளவையர் இரா.பெருமாள், குடிநீர் வடிகால் வாரிய உதவிப் பொறியாளர் எம்.லட்சுமணன், மண்டல துணை வட்டாட்சியர் சு.இந்திரா உள்பட பலர் பங்கேற்றனர்.
     
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai