Enable Javscript for better performance
மாவட்டத்தில் பரவலாக மழை- Dinamani

சுடச்சுட

    

    விழுப்புரம், திருக்கோவிலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.
     கடந்த சில தினங்களாக மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை முதல் வெயில் வாட்டி வதைத்தது. மாலை திடீரென குளிர்ந்த காற்று வீசியதுடன், இரவு 8 மணிக்கு மேல் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை இரவு 10 மணி வரை நீடித்தது. நள்ளிரவு முதல் அதிகாலை வரை விட்டுவிட்டு கனமழை தொடர்ந்தது. இதனால் வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவியது.
     இதேபோல் திருக்கோவிலூர், மரக்காணம், வானூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளதால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
     செவ்வாய்க்கிழமை மாலை முதல் புதன்கிழமை காலை வரை மாவட்டத்தில் அதிகபட்சமாக விழுப்புரத்தில் 15 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. திருக்கோவிலூரில் 14.50 மி.மீ. மழையும், வானூரில் 10 மி.மீ. மழை, மரக்காணத்தில் 5 மி.மீ. மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 44.50 மி.மீ. மழை பெய்துள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai