சுடச்சுட

    

    திண்டிவனம் உழவர் பயிற்சி நிலையம் சார்பில் கீழ்வைலாமூர் கிராமத்தில் விவசாயிகளுக்கான சிறப்பு பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
     வேளாண் துணை இயக்குநர் விஜயகுமார் மற்றும் வல்லம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் ரவீந்திரன் ஆகியோரின் ஆலோசனைப்படி முன்னோடி விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
     இதில், மண் வளம் பாதுகாத்தல், பசுந்தாள் உரச் சாகுபடி, நெல், மணிலா, உளுந்து ஆகிய பயிர்களில் நுண்ணுயிர் மற்றும் பூஞ்சாண விதை நேர்த்தி செய்தல் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. வேளாண் அலுவலர் சரவணன் கலந்துகொண்டு, பயிர் சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து விரிவாக எடுத்துக் கூறினார்.
     தொடர்ந்து, மணிலாவில் இனக் கவர்ச்சிப் பொறி அமைத்தல், நுண்ணூட்டக் கரைசல் தெளித்தல் பற்றி செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
     துணை வேளாண் அலுவலர் கர்ணன் உள்ளிட்ட வேளாண் துறையைச் சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். தேர்வு செய்யப்பட்ட முன்னோடி விவசாயிகள் பலர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai